தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்பட்டுள்ளதை நடிகை கஸ்தூரி தமது வழக்கமான பாணியில் பங்கமாய் கலாய்த்துள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்துவரும் அரசு நிறுவனமாகும்.இக்கழகத்தின் பாட புத்தகங்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலும் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், இந்த கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் தகுதியான ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி நியமிக்கப்பட்டு இருப்பதற்கு, நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழக பாடநூல் நிறுவன தலைவராக ஐ லியோனி நியமனம். சபாஷ்., இதைவிட ஒரு அருமையான தேர்வு இருக்க முடியுமா?. தமிழக பாடநூல்களில் திமுகவின் வரலாறு, திராவிட கழகத்தின் சமூகப் பாடங்கள், திரைப்படங்களின் வரிசை, பெண்களின் உடல்வாகு குறித்து பாடங்கள் இடம்பெறும் என்று இனி நாங்கள் எதிர்பார்க்கலாமா?” என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.